Skip to content

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிகோவில் தேர்வெள்ளோட்டம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிகோயிலில் இன்று காலை சாமி தேர் அம்மன் தேர் வெள்ளேரட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவானைக்காகோயிலில் பங்குனி தேரோட்டம் மார்ச் 20-ல் நடைபெற உள்ளது. இதனை யொட்டி சாமி தேர் மற்றும் அம்மன் தேர் ஆகியவற்றின் இரும்பு சக்கரங்கள் 3.50 லட்சத்தில் பழுதுபார்க்கப்பட்டது.இந்நிலையில் இன்று காலை முதலில் சாமி தேர் முன்பு பூஜை செய்யப்பட்டுசாமி தேர் சிறிது தூரம் இழுக்கப்பட்டு மீண்டும் நிறுத்தப்பட்டது. அதேபோன்று அம்மன் தேர் வடக்கு ராத வீதி திருப்பத்தைகடந்து சிறிது தூரம் சென்றவுடன் அம்மன் தேரில் உள்ள அச்சாணி தடம் புரண்டு நின்றது. இதில் அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகத்தினர் மீண்டும் தேரை இரண்டு ஜேசிபி இயந்திரம் மூலம் நிலைக்கு கொண்டு சென்றனர்.
ரூ3.50 லட்சத்தில் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் அதே நிலைக்கு சென்றதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோயில் நிர்வாகத்தினர் அம்மன் தேரை நான்காம் பிரகாரம் முழுவதும் சுற்றிவர முடிவு செய்திருந்த நிலையில் பாதி கடந்த தூரத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுகோயில் நிர்வாகத்தினர் மீண்டும் அம்மன் தேர் சக்கரங்கள் பழுது பார்க்கப்படும் என்று தெரிவித்தனர். இந்த தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில்
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

error: Content is protected !!