கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய தீர்மானத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கேரள மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரம்பரிய மலையாளப் பெயரை முறைப்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டமன்றம் பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றியது. இந்த நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக முதலில் 2023 இல் தீர்மானத்தை நிறைவேற்றி பின்னர் ஜூன் 2024 இல் அதை புதுப்பித்து, ‘கேரளம்’ மாநிலத்தின் மொழியியல் பாரம்பரியத்தையும், வரலாற்று அடையாளத்தையும் சிறப்பாக பிரதிபலிக்கிறது என்று வாதிட்டது.
கடந்த மாதம், கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள பா.ஜ.க. தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கு எழுதிய கடிதத்தில், மாநிலத்தை `கேரளம்’ என்று மறுபெயரிடுவதற்கான மாநில அரசின் நடவடிக்கையை ஆதரித்தார். மேலும் அந்த கடிதத்தில்,” மாநிலத்தின் அசல் பெயர் `கேரளம்’ என்றும், ஆங்கிலேயர்கள் தங்கள் வசதிக்காக அதை கேரளா என்று மாற்றியதாகவும். அவர்களால் செய்யப்பட்ட மாற்றங்கள் சரிசெய்யப்பட்டு உண்மையான பெயர் மீட்டெடுக்கப்படுகிறது.
இது மாநிலத்தின் கலாச்சாரத்துடன் ஒத்துப்போகிறது,” என்று கேரள முதல்வர் கூறினார். அதிகாரப்பூர்வ பதிவுகளில் கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கான தீர்மானத்தை அம்மாநில சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரளா மாநிலத்தின் பெயரை “கேரளம்” (KERALAM) என மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்க இருக்கிறது. கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற கோரி 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அம்மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இத்தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது.
இதனையடுத்து 2024ம் ஆண்டு உரிய திருத்தங்களுடன் அரசியல் சாசனத்தின் 3–வது பிரிவின் கீழ் மற்றொரு தீர்மானம், கேரளா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது கேரளா மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கேரளா மாநில அரசின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அம்மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

