Skip to content

கரூர் மாவட்டத்தின் 20-வது ஆட்சியராக ரவிக்குமார் பொறுப்பேற்பு

கரூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். இன்று ( 24-2-2026) முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார்.

கரூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த தங்கவேல் ஐ.ஏ.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சார் ஆட்சியராகப் பணியாற்றி வந்த ரவிக்குமார் ஐ.ஏ.எஸ்-ஐ கரூர் மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

கரூர் மாவட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை 19 ஆட்சியர்கள் பணியாற்றியுள்ளனர். தற்போது பொறுப்பேற்றுள்ள ரவிக்குமார், மாவட்டத்தின் 20-வது ஆட்சியர் ஆவார். இவர், பொன்னேரியில் பணியாற்றிய போது மக்கள் குறைகளைத் தீர்ப்பதில் காட்டிய வேகம் கரூர் மாவட்ட மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், புதிய ஆட்சியர் பொறுப்பேற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பொறுப்பேற்றுக்கொண்ட புதிய ஆட்சியருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

error: Content is protected !!