Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாடி கேட் பகுதியை சேர்ந்தவர் இக்பால் அகமதுவின். இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு இக்பாலின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீயில் இருந்து தப்பிக்க முயன்றும் அவர்களால் முடியவில்லை. இந்த தீ விபத்தில் காயமடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேர், அருகில் உள்ளவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கும் என்று சந்தேகிக்கின்றனர். அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!