சென்னை வியாசர்பாடி ராஜீவ்காந்தி நகர் 19வது தெருவை சேர்ந்தவர் கிளிண்டன் (25). இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்றிரவு 11 மணி அளவில் பெரம்பூர் ரமணா நகர் ஹவுசிங் போர்டு பி.பிளாக் பகுதியில் உள்ள நண்பர் பிரசாந்த் வீட்டுக்கு சென்று கிளிண்டன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது நண்பர் வீட்டில் குளிர்பானம் குடித்த சில நிமிடங்களில் கிளிண்டனுக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கிவிழுந்து உள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்களை வரவழைத்து சோதனை செய்தபோது கிளிண்டன் இறந்துவிட்டார் என்பது தெரிந்தது. இதுகுறித்து கொடுக்கப்பட்ட தகவல்படி, செம்பியம் போலீசார் சென்று கிளிண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கிளிண்டன் போதைக்கு அடிமையானவர் என்பதும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது.

