தஞ்சாவூர் பூ சந்தை செல்லும் வழியில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. ரயில்வே பாதைக்கு அருகில் இந்த கடை அமைந்துள்ளதால் மதுப்ரியர்கள் ரயில்வே தண்டவாளத்திலும் – பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையிலே பட்டப்பகலிலே அமர்ந்து குடித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்ட குப்பைகளை மது பிரியர்கள் கொளுத்தி உள்ளனர். கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது. இதனால் அவ்வழியாக சென்ற மாணவர்கள் – பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் அருகில் தண்டவாளம் உள்ளதால் உயிர் அழுத்தம் கொண்ட மின்கம்பிகள் உள்ளது. எனவே பெரும் விபத்து ஏற்பாடாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

