Skip to content

ஒரே நாளில் இரண்டு சி.ஆர்.பி.எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்முவின் ஸ்ரீநகரில் பரிம்புரா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஹரி ஓம் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வந்தார். அவர் இன்று பரிம்புராவில் உள்ள போலீஸ் நிலையத்தில் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதேபோல், காஷ்மீரின் சோபியான் மாவட்டம் படாபுரா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் மணீஷ் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வந்தார். அவர் இன்று பாதுகாப்புப்படை முகாமில் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும்,இருவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்தும் பாதுகாப்புப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!