அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தால் அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் 5-வது நாளை எட்டியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக அவரது மூத்த மகன் மொஜ்தபா காமேனி (56) ஈரானின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, காமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள 27 அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் தீவிரமான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் குவைத்தில் 3 அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும் சவுதி அரேபியாவின் எண்ணெய் கிடங்குகள் மற்றும் ஜோர்டான், குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
