திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாட்டில் கலந்து கொள்ளும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுக்காக மாபெரும் சமையல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்காக சுமார் 20 ஆயிரம் கிலோ கோழி இறைச்சியும், 30

ஆயிரம் கிலோ அரிசியும் சமைக்கப்படுகிறது. இதற்காக 700 அடுப்புகள் அமைக்கப்பட்டு, சுமார் 1,100 தன்னார்வலர்கள் உணவு சமைத்து பொதியிடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று நடைபெறும்

மாநில மாநாட்டில் கலந்து கொள்ள திருச்சிக்கு திரளாக வரும் தொண்டர்களுக்கு உணவு வழங்கும் வகையில் இந்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

