Skip to content

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் முப்பெரும் விழா- கி.வீரமணி பங்கேற்பு

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் முப்பெரும் விழா – திக தலைவர் கி.வீரமணி பங்கேற்பு!

திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் மருந்தியல் கல்லூரியில், அன்னை மணியம்மையார் 107 வது பிறந்தநாள் விழா,
மகளிர் தின விழா மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எழுதிய புத்தகங்கள் வெளியீட்டு ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியர் முனைவர் என்.முருகேஸ்வரி, “ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல், பெரியார் மருத்துவக் குழுமத்தின் செயல்பாடுகள், மூலிகை மருத்துவம் மற்றும் பயன்கள் Vol-III” ஆகிய புத்தகங்களை வெளியிட்டு, மகளிர் தினம் குறித்து சிறப்புரையாற்றினார்.
முன்னதாக பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை வரவேற்புரை வழங்கினார். பெரியார் மருத்துவ குழும இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் வாழ்த்துரை வழங்கினார். இதில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு புத்தகங்களை பெற்றுக் கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக பெரியார் மருந்தியல் கல்லூரி துணை முதல்வர் கோ.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

error: Content is protected !!