Skip to content

சிலிண்டர் தட்டுப்பாடு- புதுகையில் மத்திய அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணமாக மத்திய பா ஜ க நரேந்திர மோடி அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை காந்தி பூங்காவில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் DD பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்றது இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை. திவியநாதன் மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகேசன் வழக்கறிஞரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான சந்திரசேகரன் மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் இப்றாஹீம் பாபு மாவட்ட துணை தலைவர்கள் வேங்கை அருணாசலம் செம்பாட்டூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செம்பை மணி மாநகர தலைவர்கள் பாருக் ஜெய்லானி மதன் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆலங்குடி தமிழ்ச் செல்வன் மாமன்ற உறுப்பினர் ராஜா முகமது மாவட்ட கலைப் பிரிவு தலைவர் மேப் வீரையா மாவட்ட துணை தலைவர் எம் ஏ எம் தீன் .வீ. தமிழ்ச்செல்வன் கறம்பக்குடி தங்கசிவா எம் ஏ கே சேட் ராஜகோபால் பெருங்களூர் புல்லட் கண்ணன் மகளிர் அணி தலைவர் கவுரி சகாய ராஜ் கீரனூர் நகர தலைவர் பாஸ்கர் குன்றாண்டார்கோவில் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கோசங்களை எழுப்பினர்

error: Content is protected !!