Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவர்களிடையே மோதல்.. திருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் பலி

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 13 வயது சிறுவன் செல்வம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார் செல்வம். நல்லவன்னிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சரவணனின் மகன் செல்வம் (13) . விளையாட்டின் போது பந்து தலையில் பட்டதாக பாரதி என்ற மாணவனுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர் மாணவர்கள். அப்போது மாணவன் செல்வம் தலையில் தாக்கியதில் வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!