கோவையில் குட்கா போதைப் பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்துவந்த அஸ்வின்குமார் என்பவரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் கோவை மாநகர காவல் வடக்கு துணை ஆணையாளர் அவர்களின் உத்தரவுபடி சாய்பாபா காலனி சரக காவல் உதவி ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கவுண்டம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமை காவலர் சக்திவேல் காவலர் செல்வகுமார் ஆகியோர்கள் கொண்ட தனிப்படை அமைத்து கவுண்டம்பாளையம் காவல் நிலைய பகுதியில் புகையிலைப் பொருள்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்
இந்த நிலையில் கவுண்டம்பாளையம் ஆய்வாளர் வெற்றிச்செல்விக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சாய்பாபா காலனி வேலாண்டிபாளையத்தை சேர்ந்த அஸ்வின் குமார் (34) என்பவர் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள சில கடைகளுக்கு புகையிலைப் பொருட்கள் சப்ளை செய்ய வைத்திருப்பதாக கிடைத்தா தகவலை கொண்டு அஸ்வின் குமார் ஐ பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் தடாகம் சோமையனூரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து அதில் 200 கிலோ பெருமான புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அஸ்வின்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 200 கிலோ குட்கா போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

