Skip to content

பருத்திவீரன்’ சரவணன் ரவுடியாக நடிக்கும் போலீஸ் ஸ்டோரி…திரில்லர்

மதுரையில் தனது மகனுடன் ரகசியமாக வசித்து வருகிறார், பிரபல ரவுடி ‘பருத்திவீரன்’ சரவணன். அவரது மகன் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டு, 4 போலீஸ்காரர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இதையறிந்து பழிவாங்க துடிக்கும் சரவணன், ஒவ்வொரு போலீசின் ஃபேமிலியையும் கொன்று குவிக்கிறார். அப்போது நிஜ கொலையாளி யார் என்று தெரிந்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. லாக்கப் டெத் கதைக்களத்தில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக பாலு.எம் இயக்கியுள்ளார். ஆக்ரோஷமான கேரக்டருக்கு சரவணன் பொருத்தமாக இருக்கிறார். காமெடி இல்லாமல் குணச்சித்திர நடிப்பை வழங்கியுள்ளார் ‘காதல்’ சுகுமார். ஏ.எம்.ராஜா மலைச்சாமி, சுரேகா.ஆர், நிஷா துபே, ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா ஆகியோர் கேரக்டருக்கேற்ப கச்சிதமாக நடித்துள்ளனர். கொடைக்கானலை புதிய கோணங்களில் ஜெயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சஸ்பென்ஸ் திரில்லருக்கு ஏற்ற பின்னணி இசையை ஜெயா கே.தாஸ் வழங்கியுள்ளார். போலீஸ் ஸ்டோரிகளில் இது உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது.

error: Content is protected !!