Skip to content

துபாய் புறப்பட்ட விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறக்கம்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணிக்கு சுமார் 200 பயணிகளை ஏற்றிக்கொண்டு, சென்னையில் இருந்து துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

குஜராத் கடல் எல்லைக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்த போது, துபாயில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடப்பதாகவும், இதனால் வான்வெளி தற்காலிகமாக மூடப்படுவதாகவும் விமானிக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, துபாய் மற்றும் சென்னை விமான நிலையங்களின் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விமானி பேசினார். அப்போது மீண்டும் சென்னைக்கே திரும்புமாறு விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை 8.20 மணியளவில் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து தரையிறங்கியது. 

விமானம் புறப்படுவதற்கு காலத் தாமதமானால், சென்னையில் உள்ள ஹோட்டல்களில் பயணிகள் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், நிலைமை சீரானதும் மீண்டும் துபாய்க்கு அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!