திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறும். இதில் கலெக்டர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பது வழக்கம்.
நேற்று சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறை கேட்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இது தெரியாமல் கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வழக்கம்போல் பட்டா, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களுடன் வந்தனர்.
ஆனால் அவர்கள் கூட்ட அரங்குக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது மேலும் கலெக்டர் அலுவலக தொலைவு வாயில் பகுதியில் பொதுமக்களின் மனுக்களுக்கு இரண்டு பிரத்தியாக பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன அந்த பெட்டிகளில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.

