Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு….. குளித்தலை அருகே பரபரப்பு..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே குள்ளம்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் பூட்டை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்து கோவிலினுள் இருந்த உண்டியலை திருடிச் சென்றுள்ளனர்.

இன்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கோவிலினுள் சென்று பார்த்தபோது உண்டியல் திருடப்பட்டது தெரியவந்தது.

ஊர் பொதுமக்கள் உண்டியல் திருடப்பட்டது அறிந்து அவர்கள் தேடிய போது உண்டியலை எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் சுமார் 1கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தரிசு நிலப் பகுதியில் உண்டியலை

உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை புதரின் அருகே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உண்டியலில் இருந்து ரூபாய் 75 ஆயிரம் பணத்தினை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மர்ம நபர்கள் கோவிலில் பூட்டை உடைத்து உண்டியலை எடுத்துச் சென்று பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள கோவில்களில் அடிக்கடி உண்டியல் உடைத்து பணம் திருடப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!