சென்னையில் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக, சென்னை ஒருங் கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுமம் வாயிலாக ‘சென்னை ஒன்’ என்ற செயலி புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட இந்த செயலி மூலமாக மெட்ரோ ரெயில், மாநகர பேருந் துகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகளை கியூஆர் குறியீடு வழியாக பெறலாம். இந்த 3 சேவைகளுக்கும் சேர்த்து அல்லது தனித் தனியாகவும் மக்கள் இந்த செயலியில் டிக்கெட் பெற முடியும். அறிமுகம் செய்யப்பட்டது முதல் பொதுமக்கள் இடையே இந்த செயலி மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. தொடந்து இந்த செயலியில் பல்வேறு வசதிகள் கொண்டு வரப்பட்டன.
மாநகர பேருந்துகளுக்கான மாதாந்திர பாஸ் பெறும் வசதி, ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி, மெட்ரோ, மாநகர பஸ், ரெயிலில் ஒரு முறை சலுகை பயணம் ஆகியவை கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில் மாநகர பேருந்துகளுக்கான மாதாந்திர பாஸ்களை சென்னை ஒன் செயலியில் எடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் 50 ரூபாய் கேஷ் பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சலுகையைப் பெறுவது எப்படி?
- Chennai One App-ல் “Pass” ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
- உங்கள் தேவைக்கேற்ப Gold அல்லது Diamond பாஸைத் தேர்ந்தெடுக்கவும்.
- பணத்தை BIIIM App மூலம் செலுத்தவும்.
- 750 உடனடி கேஷ்பேக் உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்!
முக்கிய குறிப்பு:
இந்தச் சலுகை முதல் முறை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே. சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

