சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில், அவர்கள் வீடுகளுக்கே வந்து தபால் வாக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் திருச்சி மாநகரப் பகுதிகளான தில்லைநகர், உறையூர் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று தேர்தல் அலுவலர்கள் மூத்த குடிமக்களின் வீடுகளில் தபால் வாக்கு விண்ணப்பங்களை வழங்கினர்.
