பெண் மாயம்
திருச்சி மேல சிந்தாமணி காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபு இவரது மனைவி எழிலரசி (43).இவர் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் வங்கியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவதன்று வீட்டில் இருந்த எழிலரசிக்கும்,மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் மன உளைச்சலில் இருந்த எழிலரசி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்கள் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக கணவர் பிரபு கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எழிலரசி யை தேடி வருகின்றனர்.
சுமை தூக்கும் தொழிலாளிக்கு கத்தி குத்து..வாலிபர் கைது
திருச்சி அரியமங்கலம், உக்கடை பகுதி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (35) இவர் திருச்சி குட்ஷெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 17 ந்தேதி அரியமங்கலம் ஜோதி நகர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடை அருகில் ஸ்ரீதர் சென்றுக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27) என்பவர் ஸ்ரீதரின் நண்பர் இப்ராஹிம் பாதுஷாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது இதனை பார்த்த ஸ்ரீதர் அங்கு சென்று சமாதானம் செய்து வைத்தார். இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், ஸ்ரீதரை கெட்ட வார்த்தையால் திட்டி கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த ஸ்ரீதர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.இந்த சம்பவம் குறித்து ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்துள்ளனர்.

