மதுரை வடக்கு தபால் தந்தி நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு ( 45) இவர் திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் சர்வீஸ் ரோடு அருகில் உள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்க தனது குடும்பத்துடன் காரில் வந்தார். பின்னர் காரை அங்கு ஓரமாக நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்தார். பின்னர் பொருட்களை வாங்கிக்கொண்டு கார் நிற்கும் பகுதிக்கு திரும்பினார்.
அப்போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காரின் இருக்கையில் 23 பவுன் நகை மற்றும் மடிக்கணினியை வைத்திருந்தார்
மர்ம ஆசாமிகள் கார் கண்ணாடியை உடைத்து அந்த நகை மற்றும் மடிக்கணினியை கொள்ளையடித்து சென்று விட்டனர்
இதையடுத்து சுரேஷ்பாபு உடனடியாக காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து காரில் இருந்த 23 பவுன் நகை மற்றும் மடிக்கணினியை திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
