Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மலையாள நடிகைக்கு மிரட்டல்: ஐடி நிறுவன மேலாளர் கைது

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவரின் சமூக வலைத்தள பக்கத்தில் வாலிபர் ஒருவர் ரசிகன் என்று அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடிகைக்கு செல்போன் அழைப்பு விடுத்தல் மற்றும் வலைத்தளத்தில் குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து வந்தார்.
இந்தநிலையில் நடிகை எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள கலூர் ஸ்டேடியம் பகுதியில் உள்ள கடைக்கு டாட்டு போட வந்தார். இதையறிந்த அந்த வாலிபர் அங்கு வந்து நடிகையிடம் டாட்டூ குத்த வேண்டாம் எனக்கூறி மிரட்டினார். அத்துடன் நடிகையை தவறாக தொட்டு பாலியல் அத்துமீறலில் ஈடு பட்டதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நடிகை, இதுகுறித்து பாலரி வட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வந்து அந்த வாலிபரை கைது செய்து வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கத்ரிக்கடவு பகுதியை சேர்ந்த விபின் ராய் என்பதும், எம்.பி.ஏ. பட்டதாரியான அவர் காக்கநாட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!