கோவை, பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன் புதூர் பகுதியில் அமைந்துள்ளது அழுக்கு சித்தர் ஜீவசமாதி தற்போதைய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று அழுக்கு சித்தர் ஜீவசமாதிக்கு வந்திருந்தார் நீண்ட நேரம் சிவபுராணங்கள் பாட மெய்மறந்து அழுக்கு சித்தரை தரிசனம் செய்த அவர் திடீரென ஒரு காகிதத்தை எடுத்து புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர்

பட்டியலை எழுதி அழுக்கு சித்தர் பாதத்தில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட்ட பின்னர் அந்த பட்டியலை ஒரு காகித கவரில் அடைத்து அழுக்கு சித்தர் புகைப்படத்திற்கு பின்னால் வைத்து வழிபட்டு சென்றார். புதுச்சேரி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் அழுக்கு சித்தரின் தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் புதுச்சேரியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். பின்னர் விஜய் போட்டி குறித்த கேள்விக்கு மௌனம் காத்தார்.

