Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓடும் காரில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய 6 பேர்.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி தொட்டியம் கீழ கார்த்திகை பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது (35). இவர் திருச்சி மாநகரில் பர்ச்சேசிங் செய்வதற்காக தனது குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டார் .காரில் மொத்தம் ஆறு பேர் இருந்தனர்.இந்த கார் திருப்பராய்த்துறை டோல்கேட் அருகே வந்தபோது எஞ்சினில் இருந்து புகை வந்தது உடனே கார்த்திகேயன் காரை நிறுத்திவிட்டு அதை அணைக்க முயன்றார். ஆனால் திடீரென தீ குபுக்கு என பிடித்து கார் முழுவதும் பற்றி எரிந்தது பின்னால் இது பற்றி குளித்தலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் ஆனால் அதற்கு முன்னதாக கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது. இது பற்றி பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!