Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளித்தலை அருகே டூவீலர் மீது மினி வேன் மோதி விபத்து…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மீது பின்னால் வந்த டாட்டா ஏசி வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதை பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் படுகாயம் அடைந்த நபரை தூக்கி சாலை ஓரமாக அமர வைத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். பிறகு அவ்வழியாக வந்த குளித்தலை காவல் ஆய்வாளர் கருணாகரன் அங்கிருந்தவர்கள் உதவியுடன் காயமடைந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சியை வைத்து விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற மினி வேன் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!