Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

5 மாத குழந்தையை வாய்-மூக்கை அழுத்தி கொன்ற தாய்

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், சத்தியவேடு மண்டலம், என்.ஆர். அக்ரஹாரத்தில் வெங்கடேஷ் மற்றும் ஹேமாவதிக்கு தம்பதி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வசித்து வருகின்றனர். இந்தத் தம்பதியருக்கு ஐந்து வயது மகனும், ஐந்து மாத மகளும் உள்ளனர். ஹேமாவதியும், வெங்கடேஷும் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தால் எப்போதும் கோபமாக இருந்த ஹேமாவதியால், தன் குழந்தையின் அழுகையைத் தாங்க முடியவில்லை. குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்ற தாய் ஹேமாவதி தன் கையால் குழந்தையின் வாயையும், மூக்கையும் இறுக்கமாக அழுத்தினார். இதனால் ஐந்து மாதக் குழந்தை மூச்சுத்திணறி இறந்தது.
தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விவரங்களைச் சேகரித்து ஹேமாவதியைக் கைது செய்தனர். ஹேமாவதியிடம் விசாரணை நடத்தியதில், தாயே குழந்தையை கொன்றதை ஒப்பு கொண்டார்.

error: Content is protected !!