மகாவீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31, 2026) அன்று தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசின் உத்தரவின்படி, தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள் மற்றும் தனியார் தங்கும் விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் (Private Bars) அனைத்தும் நாளை மறுநாள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய தினம் மது விற்பனை எக்காரணம் கொண்டும் நடைபெறக்கூடாது என்றும், அரசின் இந்த உத்தரவை மீறி செயல்படும் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

