திருச்சி திருவரங்கம் ரயில் நிலையத்திற்கும், டவுன் ஸ்டேஷன் ரயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்துள்ளார். இறந்த நபர் பச்சை கலர் அரைக்கை சட்டையும், ஊதா மற்றும் கருப்பு நிறத்தில் கைலியும், அணிந்துள்ளார்.
இதையடுத்து இறந்த உடலை கைப்பற்றி திருச்சி இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளர் சேவுகன் திருச்சி அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

