புகையிலைப் பொருட்களை விற்ற நபர் கைது
திருச்சி மேலக்கல் கண்டார் கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் பீட்டர் (40). இவர் பொன்மலை ரெயில்வே காலனி எப் பிளாக் பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து ஜேம்ஸ் பீட்டரை கைது செய்துள்ளார். பிறகு ஜேம்ஸ் பீட்டரை ஜாமினில் விடுதலை செய்தனர்.
போதை மாத்திரையை விற்பனை செய்த ரவுடி கைது
திருச்சி ஏப் 1 – திருச்சி பாலக்கரை பெல்சி கிரவுண்ட் பழைய ரெயில்வே கட்டிடம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாலக்கரை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது பாலக்கரை காஜாப்பேட்டை பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 23) என்பவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்து அவரிடமிருந்து போதை மாத்திரை மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
நாகராஜ் ரவுடி பட்டியலில் உள்ளார்.

