Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இபிஎஸ் வாகனத்தில் அதிரடி செக்கிங்: விதிமீறல்கள் இல்லை எனப் பறக்கும் படை உறுதி

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, தேர்தல் ஆணையமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், சிவகங்கை அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மறித்து அதில் சோதனை நடத்தினர். சோதனையில் வாகனத்தில் எதுவும் சிக்காத நிலையில் தொடர்ந்து பிரசார பயணம் மேற்கொள்ள பறக்கும் படையினர் அனுமதி அளித்தனர். சிவகங்கையில் 4 தொகுதில் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்கிறார்.

error: Content is protected !!