பிரதமர் நரேந்திர மோடி வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில், சென்னைக்கு வரவுள்ளார். இதையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
4ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, அன்று காலை சென்னை ஐடிசி ஹோட்டலில் தலைவர்களை மட்டும் சந்திக்கிறார். 2026 சட்டப்பேரவை வேட்பாளர் தேர்வில் தமிழக பிஜேபியில் நிலவி வரும் பேரும் குழப்பத்தால் கடும் கோபத்தில் இருக்கும் பிரதமர் மோடி, 3 மற்றும் 4 திட்டமிடப்பட்டிருந்த பிரச்சாரங்கள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு கட்சி நிர்வாகிகளோடு சந்திப்புகளை மட்டும் நடத்திவிட்டு டெல்லி திரும்புகிறார். தேர்தலுக்கு பிறகு தமிழக பிஜேபியில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளன.
இதனிடையே மோடி வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் மீனம்பாக்கம், கிண்டி மற்றும் பிரதமர் பயணிக்கும் முக்கிய வழித்தடங்கள் “RED ZONE”-ஆக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு நாட்களில், அரசு ஏற்பாடுகளைத் தவிர, ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

