Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“விஜய்யைப் பார்க்கப் போய் இறந்தவர்கள்தான் அதிகம்”: நடிகை விந்தியா காரசாரப் பேச்சு

திருவள்ளூர், மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளர்களைஆதரித்து ஆலப்பாக்கம் ரோடு, காரம்பாகம் பகுதியில் நடிகை விந்தியா பேசியதாவது; கட்சி ஆரம்பித்து சிஎம் ஆகிவிடலாம் என்று சிலர் வருகின்றனர். விஜய்யின் அரசியல் கூட்டம் எல்லாம் அனுதாப கூட்டமாக மாறி வருகிறது. விஜய் போகும் இடமெல்லாம் கூட்டத்தில் காவு வாங்குகிறான்.

ஊர், ஊராக சென்று கூட்டம் போட்டு ரசிகர்களை சாகடிக்க எதற்காக கட்சி ஆரம்பிக்க வேண்டும். விவசாயம் பார்த்து செத்தவர்கள் கூட குறைவு, ஆனால் விஜய்யை பார்த்து செத்தவர்கள் அதிகம். விவசாயம் பார்த்து இறந்தவர்களுக்கு பணம் தருவதில்லை. ஆனால் விஜய்யை பார்த்து செத்தவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. தங்கள் வீட்டில் 9 பேர் இருக்கின்றனர்.

விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால் அவர்களை விஷம் வைத்து கொள்வேன் என்று ஒரு பெண் பேட்டி அளிக்கிறார். ஒரு சமுதாயம் வளரவேண்டும் என்றால் பெண்களும், இளைஞர்கள் தான் காரணம். இவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது. விஜய்யின் கூட்டத்திற்கு வரும் இளைஞர்களையும் பெண்களைப் பார்த்தால் தமிழ்நாடு என்னவாகிவிடும் என்ற கவலை இருக்கிறது.

கரூர் சம்பவத்தில் மட்டும் அரசியலாக்காமல் எடப்பாடியார் பேசவில்லை என்றால் விஜய்யின் ஜனநாயகம் மட்டுமல்ல விஜயே வெளியே வந்திருக்க மாட்டார். வாரிசு அரசியல் வேண்டாம் என விஜய் கூறுகிறார். வாரிசு முறை தவறு என கூற விஜய்க்கு அருகதை உள்ளதா? விஜய்யின் அப்பா இல்லை என்றால் விஜய் இல்லை. முதல் கூட்டத்திலேயே கூட்டணி சேருவோம். துணை முதலமைச்சர் பதவி தருவோம் என்று கூறியவர் விஜய். சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறார்.

இவ்வாறு பேசினார்.

error: Content is protected !!