தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 4-ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான பணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக மொத்தமுள்ள 28 தொகுதிகளில் மேலூர் உள்ளிட்ட மூன்று தொகுதிகளின் வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நீடித்த நிலையில், காங்கிரஸ் தலைவரின் முடிவுற்காக பட்டியல் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இதுதொடர்பாக டெல்லியில் நேற்று இரவு காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் ஆலோசனை முடிந்த நிலையில் தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் போட்டியிட உள்ள 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. 1. பொன்னேரி (தனி) -துரை சந்திரசேகர்
2. திருப்பெரும்புதூர் (தனி) – செல்வப்பெருந்தகை
3. சோளிங்கர் – முனிரத்தினம்
4. உதகமண்டலம் – ராமச்சந்திரன்
5. ஈராடு கிழக்கு – கோபிநாத் பழனியப்பன்
6. அறந்தாங்கி – டி.ராமச்சந்திரன்
7. கடலூர் – சந்திரசேகரன்
8. மயிலாடுதுறை – ஜமால் யூனிஸ் முகம்மது
9. காரைக்குடி – எஸ்.மாங்குடி
10. சிவகாசி – கணேசன் அசோகன்
advertisement
11. திருவாடனை – ராம.கருமாணிக்கம்
12. திருவைகுண்டம் – ஊர்வசி அமிர்தராஜ்
13. நாங்குநேரி – ரூபி மனோகரன்
14. குளச்சல் – தாரகை கத்பர்ட்
15. விளவங்கோடு – டிடி.பிரவீன்
16. கிள்ளியூர் – ராஜேஸ்குமார்
17. வேளச்சேரி – ஜெ.எம்.ஹசன் மவுலானா
18. ஊத்தங்கரை (தனி) – குப்புசாமி
19. துறையூர் (தனி) -விச்சு லெனின் பிரசாத்
20. கவுண்டம்பாளையம் – சூரிய பிரகாஷ்
21. ஆத்தூர் (தனி) – அர்த்தனாரி
advertisement
22. பென்னாகரம் – ஜி.கே.எம்.தமிழ்க்குமரன்
23. சிங்காநல்லூர் – ஸ்ரீநிதி நாயுடு
24. அம்பாசமுத்திரம் – வி.பி.துரை
25. கிருஷ்ணகிரி – செல்லக்குமார்
26. உசிலம்பட்டி – சரவணக்குமார்
27. சங்கரன்கோவில் (தனி) – சங்கை கணேசன்

