Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சுழி தொகுதியில் நான் சீட் கேட்கவே இல்லை…ராஜவர்மன்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் திருச்சுழி தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் பேசுகையில், “திருச்சுழி தொகுதியில் போட்டியிட நான் சத்தியமாக சீட் கேட்கவில்லை. எடப்பாடிதான் என்னை திருச்சுழி தொகுதிக்கு போட்டியிட அனுப்பி வைத்தார்.சாத்தூரில் நயினார் நிற்பதால் என்னை திருச்சுழியில் நிற்க வைத்து விட்டார் EPS.நெல்லை எம்.எல்.ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரன் இந்த முறை சாத்தூருக்கு மாறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை உள்ளாட்சி தேர்தலில் 20 அதிமுக ஒன்றிய கவுன்சிலர்களை ஜெயிக்க வைத்தேன். அதேபோல் திருச்சுழி தொகுதியிலும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக நிர்வாகிகளை ஜெயிக்க வைப்பேன்.நான் ஏற்கனவே சாத்தூர் எம்எல்ஏவாக இருந்த காரணத்தால் தேர்தல் வேலைகள் எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்தவன்.ஆவியூரை சேர்ந்த ஒருவர் விஜய் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். விஜய் கட்சிக்கு போடும் ஓட்டுக்கள் செல்லாத ஓட்டுக்கள். நான் வெற்றி பெற்றால் உங்களுக்காக பாடுபடுவேன்.” எனப் பேசியுள்ளார்.

சாத்தூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்த ராஜவர்மன், சசிகலா தலைமையிலான அமமுக-வில் இணைந்து போட்டியிடப் போவதாகத் தகவல்கள் கசிந்தன. சாத்தூரில் அசுர பலம் கொண்ட ராஜவர்மன் தனித்து நின்றால், அது அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வெற்றிக்கு வேட்டு வைக்கும் என இரு கட்சிகளும் அதிர்ச்சியடைந்தன.

விஷயம் விபரீதமாவதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மேலிடம், உடனடியாக சமரசப் படலத்தில் இறங்கியது. ராஜவர்மனை நேரில் அழைத்து சமாதானம் செய்த எடப்பாடி, சாத்தூரை விட்டுவிட்டு திருச்சுழி தொகுதியில் போட்டியிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். விருப்பமில்லாவிட்டாலும், தலைமையின் கட்டளைக்கு அடிபணிந்து திருச்சுழி தொகுதியில் போட்டியிட ராஜவர்மன் சம்மதித்துள்ளதாகத் தெரிகிறது.

error: Content is protected !!