திருச்சி, திருவரங்கம் வீரேஸ்வரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (31) பால் வியாபாரி. இவர் தனது வீட்டின் அருகே இரண்டு வாத்துகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் திருவானைக்காவல் பாரதி நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (25) ஸ்ரீராம் (21) ஆகிய இருவரும் அங்கு வந்து சதீஷ்குமார்யிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தனர். பிறகு ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர்கள் சதீஷ்குமாரை தாக்கி விட்டு அவரிடம் இருந்த இரண்டு வாத்துகளை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து சதீஷ்குமார் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாத்துகளை திருடிய கோபாலகிருஷ்ணன், ஸ்ரீராம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் கோபாலகிருஷ்ணன் ரவுடி பட்டியலில் உள்ளார்.
வாலிபரின் இருசக்கர வாகனம் எரிப்பு.. ரவுடி உள்பட 2 பேர் கைது
திருச்சி ஏப் 4 – திருச்சி அரியமங்கலம் சீனிவாச நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ரசித் முகமது (வயது 27) இவர் தனது வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். அப்பொழுது அங்கு வந்த அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ரியாஸ் அஹமது (வயது 26) நிக்சன் (வயது 30) ஆகிய இருவரும் ரசித் முகமதியிடம் தகராறில் ஈடுபட்டு அவருடைய இருசக்கர வாகனத்தை எரித்துவிட்டு
மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து ரசித் முகமது அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரியாஸ் அகமது, நிக்சன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். இதில் ரியாஸ் அகமது ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

