Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மனுதாக்கல்

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், திருச்சி கிழக்குத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கிருஷ்ணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தவெக தலைவர் விஜய் கடந்த 2-ம் தேதி திருச்சிக்கு நேரில் வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி மண்டலம் – 2 அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியிடம் தனது வேட்பாளர் வேட்பு மனுவை இனிகோ இருதயராஜ் தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி எம்பி துரைவைகோ, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ், திமுக கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கலுக்கு பிறகு வேட்பாளர்
இனிகோ இருதயராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் .

கிழக்கு தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொண்டு மக்களின் ஆதரவை பெற்றுள்ளேன். திருச்சி கிழக்கு தொகுதி மக்களின் நல்லது மற்றும் துக்க நிகழ்வுகளில் நின்று அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டு உள்ளேன்.

நான் எவ்வாறாக செயல்பட்டேன் என்று மக்களுக்குத் தெரியும். ஆகையால் மற்றவர்களின் கருத்துகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திருச்சி காந்தி மார்க்கெட் எந்த சூழ்நிலையிலும் இடம் மாற்றக்கூடாது என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூறியுள்ளேன், நிச்சயம் அதற்கான நடவடிக்கையை முதல்வர் மேற்கொண்டு உள்ளார். மேலும் வருகின்ற தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் எந்த விதமான வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை என, கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் குற்றம் சாட்டியுள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்..

அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் கண் ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறினார்.

error: Content is protected !!