Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் தேர்தல் களம்: மழையிலும் கலையாத கூட்டம் – மைக் பிடித்தபடி முழங்கிய சீமான்

தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அரியலூர் அண்ணாசாலையில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசுகையில்,

எல்லோருக்கும் சரியான சமமான கல்வி, இலவச மருத்துவம் தடையற்ற மின்சாரம் தூய குடிநீர் செல்ல நல்ல பாதை தரமான போக்குவரத்து ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என்ற மாற்று அரசியல் கோட்பாட்டை மண்ணில் விதைத்து நாம் தமிழர் கட்சி பயணித்து வருகின்றது. நேர்மையான அரசியல்வாதிகள் வாக்குக்கு ஏன் காசு கொடுக்க வேண்டும் காசு கொடுப்பவர்கள் அங்கு ஊழலை விதைக்கின்றனர் நல்லாட்சி கொடுத்தால் இலவச அறிவிப்புகள் தேவையில்லை பொது மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினாலே அவர்கள் வருமானத்தைப் பெருக்கி தற்சார்பு வாழ்க்கையை உருவாக்கி தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ்வார்கள் அப்பொழுது அவர்களே சொந்தமாக நீங்கள் கொடுக்கும் அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்வார்கள் என்று கூறினார்.
மேலும் உலகத்தில் கல்வியில் சிறந்த நாடாக தமிழ்நாட்டை மாற்றுவோம் என்றும் உங்களின் மூன்று வயது குழந்தையை எங்களிடம் ஒப்படைத்தால் அவர்கள் விரும்பிய கல்வியை முழுவதும் இலவசமாக வழங்குவோம் அதனால் அவர்கள் உலகத்தில் சிறந்தவர்களாக உருவாக்குவார்கள் என்று சீமான் கூறினார். மேலும் அரசு வேலை பார்ப்பவர்கள் தங்களது குழந்தைகளை தனியார் கல்வி நிறுவனத்தில் சேர்த்தால் அவர்களின் ஊதியத்தில் 50 சதவீதத்தை பிடித்தம் செய்வோம் என்றும், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கல்வியை மாநில உரிமைக்கு கொண்டு வருவோம் என்றும் உறுதியாக கூறினார். உலக நாடுகளில் கல்விகளில் முதலிடம் வகிக்கும் பின்லாந்து ஜப்பான் சிங்கப்பூர் கனடா உள்ளிட்ட நாடுகளில் மாணவர்களுக்கு போதிக்கப்படும் கல்வி முறையை எலக்ட்ரானிக் டிஸ்ப்ளே முறையில் பொதுமக்களுக்கு போட்டுக் காண்பித்து விளக்கி கூறிய சீமான், படிக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் சிறுவயதிலேயே ஒழுக்கம் வாழ்க்கை முறை, எளிமையான கல்வி ஆகியவற்றை போதிப்பதை சுட்டி காண்பித்தார். மேலும் தமிழகத்திற்கு அரசியல் மாற்றம் மற்றும் ஆட்சி முறை மாற்றம் ஆகியவை தேவை என்றும் அதனை நாம் தமிழர் கட்சி உறுதியாக செயல்படுத்தும் என்று கூறினார். 4 லட்சத்தில் இருந்த நாம் தமிழர் கட்சி வாக்கினை 36 லட்சமாக உயர்த்தி தமிழகத்தின் மூன்றாவது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாநில கட்சியாக உயர்த்தியது இந்த மக்கள் தான் என்றும் இவர்களுக்காக பாடுபடுவதே நாம் தமிழர் கட்சியின் கொள்கை கோட்பாடு என்று கூறினார்.
சீமான் பேச ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் ஆரம்பித்த மழை தீவிரமாகி பெருமழையாக கொட்டி தீர்க்கும் கனமழையாக தொடர்ந்தது. இருந்தாலும் தொடர்ந்து 40 நிமிடங்கள் மழையில் நனைந்து கொண்டே சீமான் பேசினர். அதிலும் குறிப்பாக தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சின் பெரும்பகுதியாக அரை மணி நேரத்தை கல்வி முறைக்காகவே டிஸ்ப்ளே மூலம் பொதுமக்களுக்கு விளக்கி கூறிய பிரச்சாரத்தை மேற்கொண்டார். சீமான் மழையில் நனைந்து கொண்டே பேசியபோது, எதிரே இருந்த அவரது கட்சி வேட்பாளர்கள் தொண்டர்கள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் மழையில் நனைந்து கொண்டே சேரில் அமர்ந்தும், நின்று கொண்டும் சீமானின் பேச்சை கேட்டனர். இது சீமானின் தொண்டர்கள் அனைவரும் கொள்கை பிடிப்போடு இருப்பவர்கள் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்தது.
இறுதியாக அரியலூர் ஜெயங்கொண்டம் குன்னம் பெரம்பலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதியில் போட்டுவிடும் வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரித்து தனது பேச்சை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நிறைவு செய்தார். கூடி இருந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் அனைவரும் 40 நிமிடம் மழையில் நனைந்த வாரே அந்த இடத்தை விட்டு நகராமல் சீமானின் முழு பேச்சையும் கேட்டு அவர் பேச்சை முடித்த பிறகு அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.

இரவு 9.20 மணிக்கு பேசத் தொடங்கிய சீமான் 10.10 மணிக்கு தனது பேச்சை நிறைவு செய்தார். 50 நிமிடங்கள் பேசிய சீமான் 40 நிமிடங்கள் மழையில் நனைந்தவரே பேசினார். 10 மணிக்கு முடிக்க வேண்டிய பேச்சை பத்து நிமிடங்கள் அதிகமாக பேசியதால், சீமான் மீது வழக்கு பதிவு செய்வார்களா என்பது நாளை தெரியும்.

error: Content is protected !!