தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறகரையை சார்ந்த வைரன் மகன் காளிமுத்து இவர் மீன்பிடி வேலை செய்து கொடுமை நடத்தி வருகிறார், வழக்கம்போல் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார், இன்று காலை கோடை மழை பெய்து வரும் வேளையில் 6 மணி அளவில் பலத்த சத்தத்துடன் அப்பகுதியில் இடி விழும் சத்தம் கேட்டது எனினும் மீன் பிடிக்க சென்ற காளிமுத்துவை காணவில்லை என உறவினர்கள் பார்த்தபோது இடி விழுந்த நிலையில் கடலில் வலையில் சிக்கி உயிர் இழந்து கிடந்தது தெரிய வந்தது உடனடியாக அதிராம்பட்டினம் கடலோர காவல் படை காவல்துறையினர் உடலை மீட்டு உடற்குறு ஆய்வுக்காக அதிராம்பட்டினம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது இடி விழுந்து மீனவர் இறந்தது பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அதிராம்பட்டினம் அருகே இடித்தாக்கி மீனவர் பரிதாப பலி

