கரூர், அரவக்குறிச்சி பகுதிக்கு சிறப்பு நிதியைப் பெற்று 6 மாத காலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் காவேரி கூட்டு குடிநீர் திட்டம் வருவதற்கு சட்டமன்ற முதல் கூட்டத்தொடரில் பேசி உறுதியாக முயற்சி எடுப்பேன் என திமுக வேட்பாளர் இளங்கோ வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்களிடம் உறுதி.
தமிழகத்தில் சட்டமன்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது பல்வேறு கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர்

மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முதல் முறை போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இளங்கோ மீண்டும் இரண்டாவது முறையாக வேட்பாளராக போட்டியிடுகிறார். காலை முதல் இரவு வரை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புங்கம்பாடி மேற்கு ஒன்றியம், புங்கம்பாடி கிழக்கு ஒன்றியம் எருமார்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் திமுக வேட்பாளர் இளங்கோ

பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் . வேட்பாளருக்கு அப்பகுதி பொதுமக்கள் சால்வை அணிவித்து பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திமுக வேட்பாளர் பொதுமக்களிடம் பேசுகையில்:
எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது,
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு சிறப்பு நிதியைப் பெற்று ஆறு மாத காலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் காவேரி கூட்டு குடிநீர் திட்டம் வருவதற்கு கண்டிப்பாக சட்டமன்ற முதல் கூட்டத்தொடரில் பேசி உறுதியாக முயற்சி எடுப்பேன் என உறுதியளிக்கிறேன் எனக்கூறினார்.
