திருச்சி கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ராஜசேகரன் கடந்த ஒரு வார காலமாக காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் திறந்த வெளி வாகனம் மற்றும் வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வரகனேரி, உப்பு பாறை ,ஜெயில் பேட்டை ,பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை

சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தில் அதிமுக திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் பாஜக மண்டல தலைவர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
