Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் டெய்லர் கடை உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் மோசடி

திருச்சி கிழேதா ர் தெருவை சேர்ந்தவர் சந்து முகமது ( 43 ) இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார் இவரும் பிரபல பட்டு வணிக நிறுவனத்தின் உரிமையாளருமான ஸ்ரீனிவாசன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் சந்து முகமது உடன் தொழில் முறையில் நண்பர்களாக உள்ளனர் இந்த நிலையில் இவர்கள் சந்து முகமதுவை அணுகி அவர்களுக்கு அந்தி கோவில் தெருவில் சொந்தமாக கடையுள்ளதாகவும் அதை வாடகைக்கு விட முடிவு உள்ளதாகவும் தெரிவித்தனர் அதற்கு சந்து முகமது ரூபாய் 26 லட்சத்து 75 ஆயிரம் பணம் அவர்களிடம் கொடுத்து கடையை வாடகைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார் மேலும் பணத்தை அவர்களிடம் கொடுத்தார் பின்னர் அவருக்கு அந்த கடை அவர்களுடையது இல்லை என்பது தெரிய வந்தது தொடர்ந்து தான் கொடுத்த பணத்தை அவர்களிடம் திரும்பி கேட்டபோது வெறும் ஆறரை லட்சத்தை மட்டும் கொடுத்து மிச்ச 20 லட்சம் பணத்தை தராமல் மோசடி செய்துள்ளனர் இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!