இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். பிப்ரவரி 19ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. 8 மீனவர்களை விடுவித்த ஊர்காவல்துறை நீதிமன்றம் 2 பேருக்கு அபராதம், இருவருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்தது.
