Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் திமுக வேட்பாளரை ஆதரித்து அசோக் பரப்புரை

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துராஜபுரம் பகவதி அம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பிறகு கரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜன் மற்றும் செந்தில் பாலாஜியின் சகோதரரும், கரூர் திமுக தேர்தல் பொறுப்பாளருமான அசோக் குமார் தேர்தல் பரப்புடைய மேற்கொண்டார்.

வருகின்ற 23ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முத்துராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கரூர்

சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆசி தியாகராஜன் இன்று மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரும், கரூர் தேர்தல் திமுக தேர்தல் பொறுப்பாளருமான அசோக்குமார் கலந்துகொண்டு முத்துராஜபுரம் பகவதி அம்மன் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பிறகு பிரம்மாண்ட வரவேற்பு அளித்த வாக்காளர்கள் மத்தியில் ஆலாத்தி எடுத்தவாறு தொடர்ந்து வேட்பாளர் ஆசி தியாகராஜன் தேர்தல் பரப்புரையாற்றினார்.

அப்பொழுது அவர் பேசியயில் கரூர் மாவட்டத்திற்கு 5000 கோடி நிதிகளை பெற்று தந்த செந்தில் பாலாஜியின் சின்னமான உதயசூரியன் சின்னத்திற்கு நீங்கள் வாக்களித்து இன்னும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கரூர் மாவட்டத்திற்கு வந்தடைய என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க வேண்டும் என வாக்காளர் மத்தியில் வேண்டுகோள் விடுத்தார்.

அதை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரும், கரூர் திமுக தேர்தல் பொறுப்பாளருமான அசோக் குமார் பேசுகையில் நம்மதான் ஜெயிக்கிறோம் நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம் என்ற செந்தில் பாலாஜியின் தாரக மந்திரத்தை உச்சரித்து வாக்காளர் மத்தியில் உதயசூரியன் தினத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிர்வாகிகளும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளும் என பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உதயசூரிய சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

error: Content is protected !!