சத்தீஷ்காரின் சக்தி மாவட்டத்தில் சிங்கிதாரி கிராமத்தில் வேதாந்தா அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், ஆலைக்குள் திடீரென பாய்லர் வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது.
இதனால், பாதுகாப்பு தேடி தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு தப்பியோடினர். இதில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த வெடிவிபத்தில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர். தொழிலாளர்கள் 35 முதல் 40 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
அவர்களில் பலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. பாய்லர் வெடித்ததற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இந்த தகவல் அறிந்ததும், அவசரகால பொறுப்பு குழுக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு விரைவாக சென்று. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
