Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உறையூர் களத்துமேடு இளநீர் மாரியம்மன் 33ம் ஆண்டு கரக உற்சவ விழா

திருச்சி மாநகர் உறையூர் களத்துமேட்டிலுள்ள ஓம் ஸ்ரீ இளநீர் மாரியம்மன் கோவிலின் 33ஆம் ஆண்டு கரக உற்சவ விழா வெள்ளிக்கிழமை காலை காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து காப்பு கட்டிக் கொண்டனர்.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை காவிரியாற்றங்கரை அய்யாளம்மன் படித்துறையில் இருந்து இளநீர் கரகம், பால் மற்றும் தீர்த்தக் குடங்கள், அலகு செட்டு, அக்னி சட்டிகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தடையும்.

பகல் சிறப்பு ஆராதனைகளுடன் அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை தில்லைநகர் செங்குத்தான் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்துச் செல்லும் ஊர்வலம் நடைபெறுகிறது.

தொடர்ந்து இரவு விடையாற்றி காவிரியாற்றில் நடைபெறுகிறது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

error: Content is protected !!