Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

AI தொழில்நுட்பத்தால் சிக்கிய கடத்தல் கும்பல் – 4 வயது சிறுவன் மீட்பு

குஜராத் மாநிலம் பனஸ்காந்தா மாவட்டத்தில், கடந்த ஏப்ரல் 6-ம் தேதி 4 வயது சிறுவன் தேவ் மர்ம நபர்களால் கடத்தப்பட்டான். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடத்தல்காரர்களின் முகம் மிகவும் மங்கலாகவும், அடையாளம் காண முடியாத வகையிலும் இருந்தது. வழக்கமான தேடுதல் வேட்டையில் தொய்வு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் நவீன AI தொழில்நுட்பத்தை (Artificial Intelligence) நாடினர்.மங்கலாக இருந்த சிசிடிவி படங்களை AI மென்பொருள் மூலம் மேம்படுத்தி, கடத்தல்காரரின் முகம் துல்லியமாக உருவாக்கப்பட்டது.

அந்தப் புகைப்படத்தை தேசிய குற்றப் பதிவேடு மற்றும் பிற மாநிலத் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, அது மாநிலங்களுக்கு இடையேயான குழந்தைகள் கடத்தல் கும்பலின் தலைவன் என்பது உறுதியானது.உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், தொழில்நுட்ப உதவியுடன் அவனது இருப்பிடத்தைக் கண்டறிந்து, டெல்லியில் வைத்து அவனைக் கைது செய்தனர்.

error: Content is protected !!