Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரபலங்களின் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிலவரம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களது பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து வருகின்றனர்.காலை 11 மணி நிலவரப்படி 37.56 வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42.45% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 32.62% வாக்குகள் பதிவாகியுள்ளது.

சென்னையில் தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாஜக மூத்த தலைவரும் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தர்ராஜன், பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு அவரது கணவரும் மதுரை மத்திய தொகுதி வேட்பாளருமான சுந்தர்.சி, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மணிரத்னம், எனப் பல்வேறு பிரபலங்களும் வாக்களித்தனர்.

இந்நிலையில் விஐபிகள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது. 

சேலம் எடப்பாடி தொகுதி-39.94% (எடப்பாடி பழனிசாமி)

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி-34.44% (உதயநிதி ஸ்டாலின்)

கொளத்தூர்-37.06% (மு.க.ஸ்டாலின்)

திருச்சி கிழக்கு -37.24% (தவெக தலைவர் விஜய்)

தருமபுரி  -37.54% சௌமியா அன்புமணி 

பெரம்பூர்-36.26% (தவெக தலைவர் விஜய்)

காரைக்குடி – 33.80% (சீமான்)

கோவை தெற்கு – 37.03% (செந்தில் பாலாஜி)

கரூர் – 37.82% (விஜயபாஸ்கர்)

error: Content is protected !!