தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளுக்கான அலுவலர் தேர்வு மற்றும் பயிற்சி வகுப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, வாக்கு எண்ணும் பணி 04.05.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு 149- அரியலூர் மற்றும் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ள உள்ள அலுவலர்கள் (Counting Personnel), நுண்பார்வையாளர்களுக்கு (Micro Observers) முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் (1st Randomization) தேர்வு செய்தல் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி
தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, வாக்கு எண்ணும் பணி 04.05.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு 149- அரியலூர் மற்றும் 150- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ள உள்ள அலுவலர்கள் (Counting Personnel), நுண்பார்வையாளர்களுக்கு (Micro Observers) முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் (1st Randomization) தேர்வு செய்தல் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி தலைமையில் இன்று 28.04.2026 மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 149-அரியலூர் மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் கீழப்பழுவூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 04.05.2026 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.02 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் வீதம் மொத்தம் 28 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாக்கு எண்ணும் பணிகளில் ஒரு மேஜைக்கு மேற்பார்வையாளர், உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் என மொத்தம் 3 நபர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில் வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் குறித்து விவரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சித்ரா, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வி.பிரேமி, 150 –ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன், வட்டாட்சியர் (தேர்தல்) கண்ணன் மற்றும் இதர அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
