தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4 ந்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியில் போட்டியிடும்
தவெக வேட்பாளர் ரமேஷ்க்கு ஆதரவாக பெட்டவாய்த்தலையில் தமிழக வெற்றிக்கழக அலுவலகம் இருந்தது. இந்த அலுவலகத்தில் தேர்தல் நேரத்தில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு கூடி இருந்தனர். தற்பொழுது தேர்தல் முடிவடைந்த நிலையில் தவெக அலுவலகத்திற்கு அதிகமாக தொண்டர்கள் செல்வதில்லை. இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் யாரே நள்ளிரவு 1 மணிக்கு மேலே வெற்றி கழக அலுவலகத்திற்கு சென்று திடீரென்று தீயிட்டு கொளுத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் அலுவலகம் முழுவதும் தீ பரவி எரிந்து நாசமானது.
மேலும் தமிழக வெற்றிக்கழக பேனர் கிழிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழக வெற்றிக்கழக திருச்சி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வீரசிவா தலைமையில் தவெக தொண்டர்கள் பெட்டவாய்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்து
ள்ளனர். புகாரின் அடிப்படையில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்துதமிழக வெற்றிக்கழக அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம ஆசாமிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழக வெற்றி கழகத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
