சோழ மன்னர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜராஜ சோழனும், அவருக்குப் பிறகு கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழனும் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். இதிலும் குறிப்பாக ராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்து சென்று வென்றதன் நினைவாக கங்கைகொண்ட சோழன் என்றும் தெற்காசியா வரை வெற்றி பெற்றதன் விளைவாக கடாரம் கொண்டான் என்ற பட்டப் பெயர்களுடன் மிகச் சிறப்பான ஆட்சியை நடத்தியுள்ளார்.
ராஜராஜ சோழனுக்கு அவரின் நினைவாக தஞ்சாவூரில் அவர் கட்டிய பிரகதீஸ்வரர் கோயிலுக்கு முன்புறம் ராஜராஜ சோழனின் திருவுருவ சிலை நிறுவப்பட்டு ஆண்டுதோறும் அவர் பிறந்தநாளில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவரை விட புகழ்பெற்ற ராஜேந்திர சோழன் திருவுருவ சிலை இதுவரை எங்கும் நிறுவப்படவில்லை.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் குழவடையான் கிராமத்தில் உள்ள கோகிலாம் பால் சி பி எஸ் இ பள்ளியில் தற்பொழுது ஆறடி உயரம் உள்ள ராஜேந்திர சோழனின் திருவுருவ சிலை நிறுவப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்பள்ளியில் உள்ள தனலட்சுமி ஆடிட்டோரியம் முன்புறம் 4 தூண்களுக்கு மத்தியில் ஆறடி உயர பீடத்தில் 9 அடி உயர ராஜேந்திர சோழனின் திருவுருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.
மிக கம்பீரமாக வால் ஏந்திய ராஜேந்திர சோழனின் திருவுருவம் கலையம் சத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. தலையில் கிரீடம் தரித்து மாமன்னருக்குரிய அடையாளங்களுடன் நிறுவப்பட்டுள்ள இந்தச் சிலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பள்ளி நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டுள்ள ராஜேந்திர சோழனின் திருவுருவ சிலைக்கு முன்பு ஏராளமான நின்று செல்பி எடுத்து வருகின்றனர். தமிழக அரசு கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனை சிறப்பிக்கும் வகையில் மணிமண்டபம் கட்டி வரும் நிலையில் அண்மையில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தந்த பாரத பிரதமர் மோடி ராஜேந்திர சோழனுக்கு மிகப் பிரம்மாண்டமான சிலை நிறுவப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் அதற்கு முன்னோடியாக தற்பொழுது ராஜேந்திர சோழன் சிலை திறக்கப்பட்டுள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
